வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ராஜேஸ்வரி, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த மலைராஜன் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ராஜேந்திரன் ராமநாதபுரம் உதவி இயக்குனர் தணிக்கை அலுவலக கண்காணிப்பாளராகவும், பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சந்திரமோகன் திருவாடானை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணி மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இங்கிருந்து பணி மாறுதல் செய்யப்பட்டுள்ள 2 வட்டார வளர்ச்சி அலுவலர்களும், பொறுப்பேற்று சில மாதங்களே ஆன நிலையில் பணி மாறுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story