சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம்
பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூா் - திருநின்றவூா் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 2.15 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல், கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணிக்கு காலை 9.10 முதல் பகல் 1.10 மணி வரை செல்லும் மின்சார ரெயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை ரெயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story