விராலிமலை முருகன் கோவிலில் தரிசன முறையில் மாற்றம்


விராலிமலை முருகன் கோவிலில் தரிசன முறையில் மாற்றம்
x

விராலிமலை முருகன் கோவிலில் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை

விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன், வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய மலைப்பாதை அமைத்ததால் தற்போது பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் இங்கு கருவறை முன் உள்ள அர்த்த மண்டபம் வரை சென்று வழிபாடு நடத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பொது தரிசனம் செய்பவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது சிறப்பு கட்டண சீட்டு வழியும், பொது தரிசன வழியும் கருவறையின் முன் உள்ள அர்த்தமண்டபத்தில் இணைந்து அனைவரும் சமமாக ஒரே இடத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது பக்தர்களிடையேவரவேற்பை பெற்றுள்ளது.


Next Story