மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.02 மணி, 9.30 மணி, 10.12 மணி, 10.56 மணி, 11.50 மணி, மதியம் 12.20 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 12.40 மணிக்கும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 9.30 மணி, 11 மணி, 11.30 மணி, மதியம் 12.20 மணி, 1 மணிக்கும், காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 9.15 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.45 மணிக்கும், செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் புதன்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில்களுக்கு பதிலாக கடற்கரை-தாம்பரம் இடையே காலை 9.02 மணி, 10.56 மணிக்கும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.30 மணி, 10.12 மணி, 11.50 மணி, மதியம் 12.20 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 12.40 மணிக்கும், தாம்பரம்-கடற்கரை இடையெ காலை 11.50 மணி, மதியம் 1.50 மணிக்கும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 9.30 மணி, 10.30 மணி, 11.30 மணி, மதியம் 12.20 மணிக்கும், காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 9.15 மணி, திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.45 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.