பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்


பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்
x

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளின் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை தேர்வுகள் அடுத்த மாதம் (மே) 2-ந்தேதியும், முதுநிலை தேர்வுகள் 8-ந் தேதியும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடங்களை நடத்துவதற்காக, இந்த கல்வி ஆண்டை மே 15-ந் தேதி வரை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கான இளநிலை தேர்வுகள் மே 17-ந் தேதியும், முதுநிலை தேர்வுகள் 22-ந் தேதியும் தொடங்கும். தேர்வு பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story