சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் வழித்தட சேவையில் மாற்றம்
பறக்கும் ரெயில் வழித்தட சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் வழித்தட சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் விஸ்வநாத் ,
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 கி.மீ தொலைவிற்கு நான்காவது வழிதட விரிவாக்கம் பணி ரூ.279 கோடி மதிப்பில் 7 மாத காலம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் அனைத்தும் வரும் 27 ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.
சென்னையில் ஒரே டிக்கெட்டில் அனைத்து பொது போக்குவரத்தையும் பயன்படுத்தும் திட்டம் தொடர்ந்து ஆய்வில் உள்ளது.கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி தொடர்பான வரைபடம்
தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என கூறினார்.