சேலம்- கரூர் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றம்
சேலம்- கரூர் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சூரமங்கலம்:
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்- கரூர் (வண்டி எண் 06821) மற்றும் கரூர்- சேலம் (வண்டி எண் 06822) ஆகிய ரெயில்கள் சனிக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களின் வண்டி எண் மற்றும் இயக்கப்படும் நேரம் வருகிற 27-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி கரூர்-சேலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (புதிய எண் 06852) கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு வாங்கல் ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.17 மணிக்கு வந்தடையும். மோகனூருக்கு மதியம் 12. 25 மணிக்கும், நாமக்கல்லுக்கு மதியம் 12.41 மணிக்கும், களங்காணிக்கு மதியம் 12.51 மணிக்கும், ராசிபுரத்துக்கு மதியம் 1.04 மணிக்கும், மல்லூருக்கு மதியம் 1.19 மணிக்கு வந்து சேரும், பின்னர் அங்கிருந்து 1.20 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு மதியம் 1.50 மணிக்கு வந்தடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் சேலம்- கரூர் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (புதிய எண் 06851) சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு மல்லூர் ரெயில் நிலையத்துக்கு மதியம் 2.19 மணிக்கும், ராசிபுரத்துக்கு மதியம் 2.31 மணிக்கும், களங்காணிக்கு மதியம் 2.44 மணிக்கும், நாமக்கலுக்கு 2.54 மணிக்கும், மோகனூருக்கு மாலை 3.11 மணிக்கும், வாங்கலுக்கு 3.19 மணிக்கும் செல்லும். பின்னர் அங்கிருந்து 3.20 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு மாலை 3.45 மணிக்கு சென்றடையும்.
மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.