கோவை -நாகர்கோவில் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


கோவை -நாகர்கோவில் இடையே ரெயில் சேவையில் மாற்றம் -  தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை, நாகர்கோவில் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*ராமேஸ்வரம்-கன்னியாகுமரி(வண்டி எண்-22621) இடையே இரவு 9 மணிக்கும், மறுமார்க்கமாக கன்னியாகுமரி-ராமேஸ்வரம்(22622) இடையே இரவு 10.15 மணிக்கும் புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் திங்கள் கிழமை 09-01-2023 முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

*திருச்சி-திருவனந்தபுரம்(22627) இடையே காலை 7.20 மணிக்கும், மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-திருச்சி(22628) இடையே காலை 11.35 மணிக்கும் புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

*பாலக்காடு-திருச்செந்தூர்(16731) இடையே காலை 5.30 மணிக்கும், மறுமார்க்கமாக திருச்செந்தூர்-பாலக்காடு(16732) இடையே நள்ளிரவு 12.05 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர் மற்றும் திருச்செந்தூர் இடையே நாளை முதல் 11-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*ஈரோடு-நெல்லை(16845) இடையே மதியம் 1.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் மற்றும் நெல்லை இடையே 9ம் தேதி முதல் 10-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது., மறுமார்க்கமாக நெல்லை-ஈரோடு(16846) இடையே காலை 6.15 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை மற்றும் திண்டுக்கல் இடையே 9ந் தேதி முதல் 11-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*தாம்பரம்-நாகர்கோவில்(20691) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி மற்றும் நாகர்கோவில் இடையே நாளை முதல் 10-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம்(20692) இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் மற்றும் திருச்சி இடையே திங்கள் கிழமை 09-01-2023 முதல் 11-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*கோவை-நாகர்கோவில்(16322) இடையே காலை 8 மணிக்கும், மறுமார்க்கமாக நாகர்கோவில்-கோவை(16321) இடையே காலை 7.35 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு மற்றும் நாகர்கோவில் இடையே 9ம் தேதி முதல் 11-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*புனலூர்-மதுரை(16730) இடையே மாலை 5.20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 9 மற்றும் 10-ந்தேதி நெல்லை மற்றும் புனலூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக மதுரை-புனலூர்(16729) இடையே இரவு 11.25 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் புனலூர் மற்றும் நெல்லை இடையே வருகிற 10, 11-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*சென்னை எழும்பூர்-திருச்செந்தூர்(16105) இடையே மாலை 4.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 9 மற்றும் 10-ந்தேதிகளில் திருச்சி மற்றும் திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திருச்செந்தூர்-எழும்பூர்(16106) இரவு 7.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்செந்தூர் மற்றும் திருச்சி இடையே வருகிற 10 மற்றும் 11-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*மைசூரு-தூத்துக்குடி(16236) இடையே மாலை 6.20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந்தேதி தூத்துக்குடி-விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக தூத்துக்குடி-மைசூரு(16235) இடையே மாலை 5.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந்தேதி தூத்துக்குடி-விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story