திருச்சி-மயிலாடுதுறை இடையே ரெயில் சேவைகளில் மாற்றம்


திருச்சி-மயிலாடுதுறை இடையே ரெயில் சேவைகளில் மாற்றம்
x

என்ஜினீயரிங் பணி காரணமாக திருச்சி-மயிலாடுதுறை ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சி

என்ஜினீயரிங் பணி காரணமாக திருச்சி-மயிலாடுதுறை ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

ரெயில் சேவைகளில் மாற்றம்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் என்ஜினீயரிங் பணிகள் காரணமாக திருச்சி-மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வண்டி எண் 06889 திருப்பாதிரிபுலியூர்-திருச்சி ஜங்ஷன் இடையேயான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் வரும் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை திருப்பாதிரிபுலியூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பொன்மலை வரை மட்டுமே இயக்கப்படும். பொன்மலை மற்றும் திருச்சி ஜங்ஷன் இடையேயான பகுதிக்கு இயக்கப்படாது.

வண்டி எண் 12084 கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி அதிவிரைவு ரெயில் வரும் 14, 15-ந் தேதிகளில் கோவையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். திருச்சி-மயிலாடுதுறை இடையே ஒரு பகுதிக்கு மட்டும் இயக்கப்படாது.

மயிலாடுதுறை-திருச்சி

வண்டி எண் 12083 மயிலாடுதுறை-கோவை இடையேயான ஜனசதாப்தி அதிவிரைவு ரெயில் வழக்கமாக மயிலாடுதுறை சந்திப்பில் பகல் 2.55 மணிக்கு புறப்படும். ஆனால் இந்த ரெயில் வருகிற 14, 15-ந் தேதிகளில் மயிலாடுதுறை-திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படாது. அதற்கு பதிலாக திருச்சியில் இருந்து மாலை 5 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு செல்லும்.வண்டி எண் 16233 மயிலாடுதுறை-திருச்சி இடையேயான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு செல்லும். ஆனால் இந்த ரெயில் வரும் 16-ந் தேதி மயிலாடுதுறை-தஞ்சை இடையே மட்டும் இயக்கப்படும். தஞ்சை-திருச்சி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டிஎண் 16234 திருச்சி-மயிலாடுதுறை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் 16-ந் தேதி திருச்சி-தஞ்சை இடையே இயக்கப்படாது. அதற்கு பதிலாக தஞ்சையில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.

டெமு ரெயில்

வண்டி எண் 06839 வேளாங்கண்ணி-திருச்சி இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் டெமு ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு செல்லும். ஆனால் இந்த ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை திருவெறும்பூர் மற்றும் திருச்சி ஜங்ஷன் வரை இயக்கப்படாது. இந்த ரெயில் திருவெறும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் வண்டி எண் 16234 திருச்சி -மயிலாடுதுறை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷனில் இருந்து வழக்கமாக பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த ரெயில் வரும் 12, 13-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து 50 நிமிடம் தாமதமாக பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


Next Story