பாளையம்புதூரில்மாரியம்மன் கோவில் தேரோட்டம்பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


பாளையம்புதூரில்மாரியம்மன் கோவில் தேரோட்டம்பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 3 Sept 2023 1:00 AM IST (Updated: 3 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூரில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 30-மந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பால்குடம், அம்மனுக்கு பால்அபிஷேகம் மற்றும் அலங்கார சேவை நடந்தது. 31-ந் தேதி காளியம்மன் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். விழாவின், முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story