கந்திகுப்பம் தூய விண்ணரசிஆலய தேர் பவனிஏராளமானவர்கள் பங்கேற்பு


கந்திகுப்பம் தூய விண்ணரசிஆலய தேர் பவனிஏராளமானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Aug 2023 7:30 PM GMT (Updated: 21 Aug 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கந்திகுப்பம் தூய விண்ணரசி ஆலய தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விண்ணரசி ஆலயம்

கந்திகுப்பம் கிராமத்தில் தூய விண்ணரசி ஆலய தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவை, வேலூர், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மறை மாவட்ட குருக்கள் தலைமையில் நவநாள் திருப்பலி உள்ளிட்டவை நடந்தன. நேற்று முன்தினம் காலை நடந்த நிகழ்ச்சிக்கு சேலம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமை தாங்கினார். திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேரினை பங்குதந்தை இருதயநாதன் மந்திரித்து தேர் பவனியை தொடங்கி வைத்தார்.

தேர்பவனி

வாண வேடிக்கையுடன் ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த தேர் பவனி கந்திகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் நள்ளிரவு ஆலயம் வந்தடைந்தது. தேர் பவனியில் பர்கூர், கிருஷ்ணகிரி, எலத்தகிரி, புஷ்பகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்ற தேர் மீது உப்பை வீசினர். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


Next Story