தூய இன்னாசியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி


தூய இன்னாசியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி
x

விருதுநகர் தூய இன்னாசியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பேர் பங்கேற்றனர்.

விருதுநகர்


விருதுநகர் தூய இன்னாசியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பேர் பங்கேற்றனர்.

ஆலய திருவிழா

விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தின் 78-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மறைவட்ட அதிபரும், பங்குத்தந்தையுமான அருள்ராயன் அடிகளார், துணை பங்குத்தந்தை கரோலின் சிபு அடிகளார் மற்றும் பங்கு இறை மக்கள் முன்னிலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட அருட்பணியாளர் ஜான் கென்னடி அடிகளார் புனித இன்னாசியார் உருவம் பொறித்த கொடியினை கடந்த 14-ந் தேதி ஏற்றி வைத்து திருவிழாவினை தொடங்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மறையுறையும் நடைபெற்றது. திருவிழாவினை முன்னிட்டு தினசரி மாலையில் நவநாள் திருப்பலியும், மறையுறையும் நடைபெற்றது.

தேர் பவனி

விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக ஆலய பங்குத்தந்தை அருள் ராயன் அடிகளார், துணை பங்குத்தந்தை கரோலின் சிபு அடிகளார் மற்றும் விருதுநகர் பங்கின் அருட்பணியாளர்கள் தலைமையில் திருப்பலியும் மறையுறையும் நடைபெற்றது.

தொடர்ந்து மிக்கேல் அதிதூதர், புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை, புனித இன்னாசியார் திருவுருவம் வண்ண மின்விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட 3 மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

திருப்பலி

தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம், தெப்பம் தெற்கு, காமராஜர் இல்லம், மேலத் தெரு, கடைவீதி வழியாக மீண்டும் தெப்பம் மேற்கு பகுதி வழியாக ஆலயத்தினை வந்தடைந்தது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர். விழா வில் அருட்தந்தையர்கள் மேலூர் அந்தோணி பாக்கியம் அடிகளார், மதுரை தாமஸ் வெனிஸ் அடிகளார், நிறைவாழ்வு நகர் அந்தோணிசாமி அடிகளார், ராயப்பன்பட்டி ஞானப்பிரகாசம் அடிகளார், கோட்டூர் ஆரோக்கியம் அடிகளார், திருத்தங்கல் பெனடிக்ட் அம்புரோஸ் அடிகளார், அனுமந்தன்பட்டி பிரான்சிஸ் சேவியர் அடிகளார் மற்றும் அருட் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.

10-வது நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட இளையோர் பணிக்குழு செயலாளர் பன்னீர் ராஜா தலைமையில் திருவிழா திருப்பலியும், மறையுறையும் நடைபெற்றது. மாலை மதுரை நற்செய்தி பணிக்குழு செயலாளர் அந்தோணி ராஜா அடிகளார் தலைமையில் நன்றி திருப்பலி மற்றும் நற்கருணை பவனியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மறைவட்ட அதிபர் அருள்ராயன் அடிகளார், துணைப் பங்குத்தந்தை கரோலின் சிபு அடிகளார் தலைமையில் பங்கு பேரவையினர் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.


Next Story