பென்னாகரம் அருகே லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேர்த்திருவிழா


பென்னாகரம் அருகே லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 4 Jun 2023 6:45 PM GMT (Updated: 5 Jun 2023 1:14 AM GMT)
தர்மபுரி

பென்னாகரம்

பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேரோட்டம் கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் லட்சுமி நரசிம்மர் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம் என தினமும் பல்வேறு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல் திருக்கல்யாண உற்சவம், கருட உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் தேரில் வைத்து தீபாராதனை காண்பித்த பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என முழக்கம் எழுப்பியவாறு தேரை இழுத்து நிலை சேர்த்தனர். இதில் தர்மபுரி மாவட்டம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story