காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேர் திருவிழா


காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
x

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

காஞ்சிபுரம்

பிரம்மோற்சவம்

சக்தி பீட தலங்களில் ஒன்றானதும் உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 25-ந்தேதி தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகளில் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

தேர் திருவிழா

7-ம் நாளான நேற்று காலை காமாட்சி அம்மன் ரோஸ் நிற பட்டு உடுத்தி மனோரஞ்சிதம் மல்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலை அருகே எழுந்தருளினார்.

யாகசாலை பூஜை நிறைவு பெற்ற பின் கோவில் அருகே நின்று இருந்த தேரில் எழுந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் ஆதிசங்கரர் முன் செல்ல மேள தாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டியினர் வேதங்கள் பாடிவர காஞ்சீபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆங்காங்கே காத்திருந்து தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.


Next Story