மருதூர் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
மருதூர் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கடந்த 18 நாட்களுக்கு முன்பு கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாள்தோறும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர விழாவான தீமிதி மற்றும் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story