மீஞ்சூரில் தேர் திருவிழா


மீஞ்சூரில் தேர் திருவிழா
x

மீஞ்சூரில் புகழ்மிக்க ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருவள்ளூர்

மீஞ்சூரில் புகழ்மிக்க ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்த நேற்று காலையில் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் எழுந்தருளினார்.

தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ துரைசந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம்பலராமன், பொன்ராஜா, மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் ருக்மணிமோகன்ராஜ் கோவில் செயல் அலுவலர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story