வரதராஜபெருமாள் கோவிலில் தேரோட்டம்


வரதராஜபெருமாள் கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே வரதராஜபெருமாள் கோவிலில் தேரோட்டம்

விழுப்புரம்

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே கெங்கபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதரஜபெருமாள் கோவிலிலிருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். பின்பு முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் சாமிக்கும், தேருக்கும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பிற்பகல் 1.30 மணிக்கு நிலைக்கு வந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story