லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் வெள்ளோட்டம்


லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் வெள்ளோட்டம்
x
தினத்தந்தி 30 May 2023 6:30 PM GMT (Updated: 30 May 2023 6:30 PM GMT)

பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பூவரசங்குப்பம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செப்பனிடப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதையடுத்து தேர் வெள்ளோட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தன்று நடக்கிறது. இதையொட்டி அந்த தேர், கோவில் முன்பிருந்து வெள்ளோட்டமாக புறப்பட்டு சிவன் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சந்திகாப்பான் கோவில் தெரு ஆகிய 4 மாட வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், கோவில் செயல் அலுவலர் மதனா, அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story