மயிலம் முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


மயிலம் முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x

மயிலம் முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர்களுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்டம் சிவஞான பாலயா சுவாமிகள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றார்.

பின்னர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் கோவில் வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல் மயிலம் அருகே உள்ள பாதுகாப்புலியூர் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

1 More update

Next Story