நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணை 117 அடியை எட்டியது


நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணை 117 அடியை எட்டியது
x

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டி உள்ளது. வினாடிக்கு 615 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டி உள்ளது. வினாடிக்கு 615 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணை

தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

இந்த அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ணகிரி அணை நிரம்பி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது வினாடிக்கு 1250 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது 6777 மில்லியன் கன அடி நீர் தற்போது அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 615 கன அடி நீர் கடலூர் நோக்கி செல்லும் தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

எனவே தென் ஆற்றின் கரையோரம் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதால் பாலங்களை பொதுமக்கள் கடப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கான வெள்ள அபாய எச்சரிக்கைகளை ஒலிபெருக்கிகள் மூலம் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story