சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு
சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர்
சாத்தூர் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன். இவர் எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது சிவகாசியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரோடு கூட்டு சேர்ந்து பட்டாசு தொழிற்சாலை நடத்தியதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக ரவிச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்திருந்தார். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி வள்ளி மணாளன் விசாரித்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உள்பட 6 பேர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், மோசடி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.