விழுப்புரத்தில் வாடிக்கையாளர்களிடம் செல்போன்களை கொடுக்காமல் மோசடி; டெலிவரி நிறுவன ஊழியர் கைது


விழுப்புரத்தில்     வாடிக்கையாளர்களிடம் செல்போன்களை கொடுக்காமல் மோசடி; டெலிவரி நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் வாடிக்கையாளர்களிடம் செல்போன்களை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்


விழுப்புரம் திருவாமாத்தூர் சாலை ராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 39). இவர் அதே பகுதியில் ஹோம் டெலிவரி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் வளவனூர் பக்கமேடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (25) என்பவர் ஒரு வருடமாக பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், வாடிக்கையாளர்களுக்கு சேர வேண்டிய ரூ.96 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை அவர்களிடம் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து ராஜா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ்சந்திரபோசை கைது செய்தனர்.


Next Story