தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட ரசாயண கழிவுகள் - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை


தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட ரசாயண கழிவுகள் - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
x

தென்பெண்ணை ஆற்றில் ரசாயண கழிவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால், குவியல் குவியலாக ரசாயண நுரைகள் பெங்கி செல்கின்றன.

கிருஷ்ணகிரி,

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தென்பெண்ணை ஆற்றில் ரசாயண கழிவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,537 கனஅடி தண்ணீர் தற்போது வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி 1,460 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே தென்பெண்ணை ஆற்றில் ரசாயண கழிவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால், குவியல் குவியலாக ரசாயண நுரைகள் பெங்கி செல்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, ஆற்றில் குளிப்பவர்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் வரக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

1 More update

Next Story