செங்கல்பட்டு மாவட்ட வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
செங்கல்பட்டு மாவட்ட வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் இந்த ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பல வக்கீல்கள் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டனர். இந்நிலையில் தேர்தல் அதிகாரியாக முன்னாள் வக்கீல்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் தலைவராக ஏ.கே.சோமசுந்தரம், துணைத்தலைவராக மீனாட்சி, செயலாளராக சங்கர், பொருளாளராக முனியாண்டி, துணை தலைவராக (மகளிர்) சுகந்த குமாரியும் வெற்றிபெற்றனர். நூலகராக அஸ்வினி போட்டியின்றி வெற்றிபெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சக வக்கீல்கள் நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story