செங்கல்பட்டு: தனியார் கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய காவலாளி கைது


செங்கல்பட்டு: தனியார் கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய காவலாளி கைது
x

திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாசபடம் அனுப்பிய காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே படூரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவ,மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

மாணவிகளுக்கான விடுதியில் காவலாளியாக பால சுப்பிரமணி (வயது 42) என்பவர் செயல்பட்டு வந்தார். காவலாளி பாலசுப்பிரமணி விடுதியின் வருகைப்பதிவேட்டிலிருந்து ஒரு மாணவியின் செல் போன் எண்ணை எடுத்து, அதன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து அக்கல்லூரியின் முதல்வர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி காவலாளி பாலசுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story