ஆப்பூர் ஊராட்சி மே தின விழாவில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ பங்கேற்பு


ஆப்பூர் ஊராட்சி மே தின விழாவில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ பங்கேற்பு
x

செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் ஊராட்சியில் மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு

விழாவை முன்னிட்டு வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட உதயநிதி ஸ்டாலின் மன்றப் பொருளாளர் ஆப்பூர்.கமல் தலைமை தாங்கினார், தி.மு.க. கிளைச்செயலாளர் ரவிச்சந்திரன், ஆப்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் குமாரசாமி, தி.மு.க. நிர்வாகி டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்குளத்தூர் தி.மு.க. மேற்கு ஒன்றியச்செயலாளர் ஆப்பூர்.சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு 1,000 பேருக்கு பிரியாணி வழங்கினார்கள்.

விழாவில் பேசிய எம்.எல்.ஏ. சமூகவலைத்தளங்களில் தமிழ்நாட்டில் வட மாநிலத்தொழிலாளர்களை தாக்குவதாக பொய்யான வதந்திகள் பரவி வருகின்றன. அதனை யாரும் நம்பவேண்டாம். நாம் எல்லோரும் சமத்துவமாகவும், நண்பர்களாகவும் வாழ்கிறோம் என்று தெரிவித்தார். பின்னர் மேதின வாழ்த்து பதித்த கேக் வெட்டி வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர் வழங்கினார். மேலும் ஒவ்வொரு மேதினத்தன்றும் இதேபோல் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விருந்து வழங்கப்படும் என கமல் தெரிவித்தார்.


Next Story