செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20-ந்தேதி நடக்கிறது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்


செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20-ந்தேதி நடக்கிறது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
x

செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20-ந்தேதி நடக்கிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வருகிற 20-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முக தேர்வை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12- ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், நர்சுகள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வருகிற 20-ந்தேதி காலை 10. மணி முதல் மதியம் 2 மணி வரை வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். மேலும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story