செங்கல்பட்டு: வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை - 7 பேர் கைது


செங்கல்பட்டு: வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை - 7 பேர் கைது
x

செங்கல்பட்டு அருகே வாலிபரை கொலை செய்த 7 பேர் கொண்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அடுத்த பாரதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராஜேஷ் கண்ணா (22), டாடா மேஜிக் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இரவு நேர காவலாக ராஜேஷ் கண்ணா, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் விநாயகருக்கு காவலில் இருந்த ராஜேஷ் கண்ணாவை சிலை அருகே வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் கண்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தடுக்க முயன்ற கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு அருகே பதுங்கியிருந்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தியன்று நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story