சென்னை: சாலைகளில் இடையூறாக சுற்றி திரிந்த 226 மாடுகள் பிடிபட்டன


சென்னை: சாலைகளில் இடையூறாக சுற்றி திரிந்த 226 மாடுகள் பிடிபட்டன
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 28 July 2022 10:56 AM GMT (Updated: 28 July 2022 11:00 AM GMT)

மொத்தம் 226 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 10 பேரை நியமித்து காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மொத்தம் 226 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை சொந்த இடங்களிலேயே கட்டி வைக்க வேண்டும்.

பொது வெளியில் விடக்கூடாது. மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்யும்போது அந்த இடங்கள் குறித்து முன்கூட்டியே அந்தந்த மண்டல நல அலவலர்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். மீறினால் காவல் துறையில் புகார் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story