சென்னை அண்ணா சாலை - ஜீ.பி. சாலையில் போக்குவரத்து மாற்றம்நாளை முதல் அமல்


சென்னை அண்ணா சாலை - ஜீ.பி. சாலையில் போக்குவரத்து மாற்றம்நாளை முதல் அமல்
x

சென்னை அண்ணா சாலை- ஜீ.பி. சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது.

சென்னை

சென்னை,

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

சென்னை ராயப்பேட்டை ஜீ.பி. சாலையின் இருபுறமும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்த சாலையில் இருபுறமும் 4 சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் கடை அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் அதிகப்படியான மக்கள் இந்த சாலைக்கு வருகை புரிகின்றனர். எனவே அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே அண்ணாசாலை - ஜீ.பி. சாலையில் 27-ந்தேதி (நாளை) முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்பட்டு வைட்ஸ் ரோடு சாலை, ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம். மேற்கண்ட வாகனங்கள் ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம்.

* ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலைக்கு அனுமதிக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வலது பக்கம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு, இடது பக்கம் திரும்பி அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் 'யு டர்ன்' செய்து அண்ணாசாலை, டேம்ஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்

அண்ணாசாலை-வாலாஜா சந்திப்பு

* அண்ணாசாலை- வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் ஜீ.பி. சாலையில் அனுமதிக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்லலாம்.

* அண்ணாசாலை-வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் வாகனங்கள் ஜீ.பி. சாலை சந்திப்பில் 'யு டர்ன்' செய்ய தடைசெய்யப்பட்டு, நேராக அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் 'யு டர்ன்' செய்து அண்ணாசாலை, டேம்ஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

* ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து ஜீ.பி. சாலை நோக்கி வரும் வாகனங்கள் டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை வழியாக சென்று ஜீ.பி. சாலையை அடையலாம்.

மயிலாப்பூர் சாய் பாபா கோவில் சாலை

மயிலாப்பூர் வெங்கடசே அக்ரகாரம் சாலையில் அமைந்து உள்ள சாய்பாபா கோவிலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று வரும் பக்தர்கள் கூட்டத்தினால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையை கடப்பது மிகவும் சவாலாக உள்ளது. எனவே பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சாலையில் வருகிற 31-ந் தேதி (வியாழன்) முதல் வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டும் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

டவுட்டன் சந்திப்பு

சென்னை வேப்பேரி டவுட்டன் சந்திப்பில் 5 சாலைகள் சந்திப்பதால் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டியும், வாகன ஓட்டிகளின் நன்மை கருதியும் 26-ந்தேதி(இன்று) முதல் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் டவுட்டன் சந்திப்பில் நேராக ரித்தர்டன் சாலைக்கும் மற்றும் வலது புறம் திரும்பி புரசைவாக்கம் நெடுஞ்சாலைக்கும் செல்ல அனுமதியில்லை.

* இருசக்கர மற்றும் இலகு ரக வாகனங்கள் டவுட்டன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 15 மீட்டர் தொலைவில் நாராண குரு சாலையில் உள்ள ஆவின் பூத் வழியாக செல்லலாம்.

* கனரக வாகனங்கள் டவுட்டன் சந்திப்பில் இடது புறம் திரும்பி நாராயணா குரு சாலை ஈ.வி.கே. சம்பத் சாலை மற்றும் ஜெர்மையா சாலை வழியாக செல்லலாம்.

வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story