சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரூ.21 லட்சம் பறிமுதல் - ஒருவர் கைது


சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரூ.21 லட்சம் பறிமுதல் - ஒருவர் கைது
x

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.21.45 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் தலைமையிலான போலீசார் குழு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரபாலி, போலீஸ் ஏட்டு பாண்டியன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த நபரை விசாரிக்கும் போது முன்னுக்குப்பின் முரனாக பேசியதையடுத்து, போலீசார் அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர்.அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.21 லட்சத்து 45 ஆயிரம் கையிருப்பு தொகையாக வைத்திருந்தது தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த நபர் கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த கைலாஷ் குமாவாத்(வயது 29) என்பதும், இவர் உரிய ஆவணங்களின்றி அதிகளவு பணத்தை நெல்லூரில் இருந்து ரெயிலில் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story