சென்னை செஸ் ஒலிம்பியாட்: கடைசியாக புறப்பட்ட வீராங்கனை - முத்தம் கொடுத்து வழியனுப்பிய பெண் எஸ்.பி...!


சென்னை செஸ் ஒலிம்பியாட்: கடைசியாக புறப்பட்ட வீராங்கனை - முத்தம் கொடுத்து வழியனுப்பிய பெண் எஸ்.பி...!
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற நைஜீரியா வீராங்கனை கடைசி நபராக சென்னையில் இருந்து தாயகம் புறப்பட்டார்.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் ஜூலை 28-ம் தேதி முதல் கடந்த 10-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,400 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்ததை தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப தொடங்கினர்.இந்த நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற நைஜீரியா வீராங்கனை, கடைசி நபராக சென்னையில் இருந்து தாயகம் புறப்பட்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நைஜரீயா நாட்டு வீராங்கனை டோரிட் செமுவா ஒபோவினோ பூரண குணமடைந்த நிலையில் அவரது சொந்த ஊருக்கு வழியனுப்பி வைக்கப்பட்டார்.

அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அப்போது பெண் எஸ்பி ஒருவர் நைஜீரியா வீராங்கனைக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.




Next Story