சாலை சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


சாலை சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
x

சாலை சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளும், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில், வேலை முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று மணப்பாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதனந்தபுரம், சபரிநகர், எம்.ஜி.சாலை பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இதேபோல, மடிப்பாக்கம் மற்றும் முகலிவாக்கத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது, பணிகளை மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை கமிஷனர் அமித், மண்டல உதவி கமிஷனர் முருகன், செயற்பொறியாளர் முரளி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story