பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்கவும் சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 2 வாரங்களில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.22,22,810 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story