சென்னை: முதுநிலை நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த டாக்டர் மாயம்


சென்னை: முதுநிலை நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த டாக்டர் மாயம்
x

சென்னையில் முதுநிலை நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த டாக்டர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னையில் முதுநிலை நீட் தேர்வில் டாக்டர் ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த டாக்டர் தனது சசோதரனின் செல்போனுக்கு 'பெற்றோரை பார்த்துக்கொள்' என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாயமாகியுள்ளார்.

அந்த குறுஞ்செய்தியை பார்த்த டாக்டரின் சகோதர் உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான டாக்டரை தேடி வருகின்றனர்.


Next Story