சென்னை: புனரமைப்பு பணியின் போது அரசு மருத்துவமனையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு....!


சென்னை: புனரமைப்பு பணியின் போது அரசு மருத்துவமனையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு....!
x

சென்னையில் அரசு மருத்துவமனையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை கே.கே.நகரில் உள்ள புறநகர் அரசு மருத்துவமனையின் மேற்பகுதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் கீழ்உள்ள அறையில் பொதுமக்கள் சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்த நிலையில் இன்று திடீரென் மருத்துவமனையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அப்போது அந்த அறையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் பயத்தில் அலறினர். இதனால் கே.கே.நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.

அப்போது, மருத்துவமனையின் மேற்பகுதியில் நடைபெறும் புனரமைப்பு பணியால் ஏற்பட்ட அதிர்வால் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story