சென்னை: மழை காரணமாக 2வது நாளாக விமான சேவை பாதிப்பு
சென்னை வந்த சிங்கப்பூர் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்குச் சிங்கப்பூரிலிருந்து 178 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலை நிலவியது. இதனால், அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதுபோலவே, விசாகப்பட்டினம், கொச்சி, ராஜமுந்திரி ஆகிய நகரங்களிலிருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானிலே வட்டமடித்து தாமதமாகத் தரையிறங்கியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டது. இதைப் போல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
Related Tags :
Next Story