சென்னை: 3,600 செம்புகளால் ஆன பிரம்மாண்ட விநாயகர் சிலை - பக்தர்கள் வியப்பு
கொளத்தூர் அருகே 3,600 செம்புகள் மற்றும் தேங்காய்கள் கொண்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை, மக்கள் வீடுகள், பொது இடங்களில் கடவுள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டியையையொட்டி சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் 40 அடி உயரத்தில் 3,600 செம்புகள் மற்றும் தேங்காய்கள் கொண்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலையை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் கண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story