சென்னை மாநகராட்சி: 32 ஆயிரம் மரக்கன்றுகள் உருவாக்கும் பணி


சென்னை மாநகராட்சி: 32 ஆயிரம் மரக்கன்றுகள் உருவாக்கும் பணி
x

சென்னை மாநகராட்சி சார்பாக 32 ஆயிரம் மரக்கன்றுகள் உருவாக்கும் பணியை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

சென்னை

சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் மாநகராட்சி அடர்வனக்காடு பகுதி உள்ளது. இங்கு, சென்னை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை மிராக்கி ரிட், கம்யூனிட்ரீ ஆகியவை இணைந்து 32 ஆயிரத்து 320 மரக்கன்றுகளுக்கான நாற்றாங்கால் உருவாக்கப்பட உள்ளது.

இந்த பணியை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கிவைத்தார். இதில், கொய்யா மற்றும் நாட்டு மரக்கன்று விதைகள் கொண்டு நாற்றாங்கால் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாற்றாங்கால் உருவாக்கும் பணியை 3 வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், இச்செடிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி, ரோட்டரி மாவட்ட நிர்வாகி மகாவீர் போத்ரா, கம்யூனிட்ரீ நிறுவனர் ஹபீஸ் கான் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story