சென்னை: ரெயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த ஒடிசா மாநில பெண் - போலீசார் விசாரணை


சென்னை:  ரெயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த ஒடிசா மாநில பெண்  -  போலீசார் விசாரணை
x

ஆவடி அருகே ரெயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த ஒடிசா மாநில பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி,

ஒடிசா மாநிலம், புத்த ராஜா சாம்பல்லூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் பதான். இவரது மகள் மேகா ஸ்ரீ (வயது 30). இவர் டெல்லியில் எம்.டெக்., பி.எச்.டி., பட்ட படிப்பை படித்து முடித்துவிட்டு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஐ.ஐ.டி -யில் தங்கி ஆராய்ச்சி படிப்பை படித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நேற்றுகாலை ஆவடி - கல்லூரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் நெற்றி மற்றும் தலையில் மட்டும் அடிபட்டு உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். ரெயில்வே ஊழியர் ஒருவர் ரெயில் தண்டவாளங்களில் வேலை செய்து கொண்டிருந்த போது மாணவியில் உடலை பார்த்து ஆவடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி ரெயில்வே போலீசார் விரைண்டு வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை மீட்ட்கும் போது பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து அவர் யார் என்பதை அடையாளம் கண்டனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story