மல்யுத்த போட்டியில் சென்னை போலீஸ்துறை அணி 'சாம்பியன்'


மல்யுத்த போட்டியில் சென்னை போலீஸ்துறை அணி சாம்பியன்
x

மல்யுத்த போட்டியில் வென்ற சென்னை போலீஸ்துறை அணிக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கேடயம் வழங்கினார்.

சென்னை

63-வது தமிழ்நாடு போலீஸ் மண்டலங்களுக்கு இடையிலான மல்யுத்த போட்டி சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது. சென்னை போலீஸ்துறை, ஆவடி போலீஸ் கமிஷனரகம், தாம்பரம் போலீஸ் கமிஷனரகம், தமிழக போலீஸ்துறையின் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தமிழ்நாடு ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை ஆகிய 9 அணிகள் கலந்துகொண்டன. 28 போலீஸ் அதிகாரிகள் உள்பட 652 போலீஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மல்யுத்தம், கை மல்யுத்தம், பளுதூக்குதல், உடல் கட்டழகு, வலு தூக்குதல், குத்துச்சண்டை, கபடி ஆகிய 7 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை போலீஸ் துறை ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் 87 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.

62 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தமிழ்நாடு ஆயுதப்படை அணியும், 57 பதக்கங்களுடன் 3-வது இடத்தை மத்திய மண்டல அணியும் பிடித்தன. பரிசளிப்பு விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

சென்னை போக்குவரத்து போலீசாருக்கு வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், இணை கமிஷனர் மயில்வாகணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story