சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு


சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
x

அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களில் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

சென்னை கோட்ட மேலாளர் ஆய்வு

சென்னை ரெயில்வே கோட்ட மேலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள விஸ்வநாத் ஈர்யா நேற்று அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிக்கெட் கவுண்ட்டர், பிளாட் பாரம், நடை மேம்பாலம், ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடம், சிக்னல் அறை, ரெயில் கட்டுபாட்டு அறை, ரெயில் ஓட்டுனர்கள், கார்டுகள் ஓய்வறைகள் மற்றும் அம்ரித் பாரத் திட்டத்தில் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த அவர் ராணிப்பேட்டை ெரயில் நிலையம் வரை புதிய பயணிகள் ெரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ெரயில்வே துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது வாலாஜா ரோடு ெரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் எஸ்.ஜெயப்பிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் சென்னை - ஷீரடி, சென்னை - பாலக்காடு, டாடா - ஆலப்புழா, சென்னை - ஹூப்ளி, வாஸ்கோடகாமா - சென்னை உள்ளிட்ட ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருத்தணி, திருப்பதி, பெங்களூரு ஆகிய வழித்தடத்தில் புதிய ெரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை

அதேபோன்று ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக தனி ரெயில் மூலம் வந்த அவரை ெரயில் நிலைய மேலாளர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க செயலாளர் எஸ்.ஜெகன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்கள், ரெயில்வே போலீஸ் நிலையம், முன்பதிவு அலுவலகங்கள், ரன்னிங் ரூம், ரெயில் நிலைய யார்டுகள் போன்ற பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் ெரயில் நிலையத்தில் பணிபுரியும் பிரிவு அலுவலர்களுடன், தற்போதுள்ள பராமரிப்பு மற்றும் மேம்படுத்தப்பட உள்ள பணிகள் போன்றவைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது ரெயில்வே சங்க நிர்வாகிகள் ஜெகன், செந்தில்குமார், ஜெகன் குமார் மற்றும் அதிகாரிகள், ஜோலார்பேட்டை ெரயில்வே மற்றும் பாதுகாப்புப் படை போலீசார் உடன் இருந்தனர்.


Next Story