சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 15 நாட்களுக்கு ரத்து
சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்
சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில்வே ஜங்ஷன் யார்டு பகுதியில் தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக நாளை (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை சென்னை சென்ட்ரலிலிருந்து தினமும் திருப்பதிக்கு காலை 6.25-க்கு புறப்படும் (வண்டி எண். 16057) சப்தகிரி எக்ஸ்பிரஸ், பிற்பகல் 2.15-க்கு புறப்படும் (வண்டி எண். 16053) திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் மாலை 4.35-க்கு புறப்படும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் (எண்.16203) ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல மறுமார்க்கத்தில் திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.25-க்கு புறப்படும் (வண்டி எண்.16204) கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரெயில், காலை 10.10-க்கு புறப்படும் (வண்டி எண்: 16054) சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மாலை 6.05-க்கு புறப்படும் (வண்டி எண். 16058) சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு மத்திய ரெயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.