சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைவு..!


சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைவு..!
x
தினத்தந்தி 23 May 2022 4:27 AM GMT (Updated: 23 May 2022 6:31 AM GMT)

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.

சென்னை

சென்னை,

சமீப நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, நேற்று முன்தினம் ரூ.80 முதல் ரூ.85 வரை மொத்த மார்க்கெட்டுகளில் விற்பனை ஆனது. வெளி மார்க்கெட்டுகளில் இதன் விலை மேலும் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்கப்பட்டது.

ஏற்கனவே அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, தக்காளி விலை மேலும் ஒரு இடியாக அமைந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தக்காளி விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரித்து இருந்தது. அதாவது மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளில் ரூ.79-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.


Next Story