சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம்


சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம்
x

பேராசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 2017ம் ஆண்டு முதல் அளிக்கப்படாமல் உள்ள உரிய மானிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஒரு பிரிவு மாணவர்கள் இறங்கி உள்ளனர்.


Next Story