பள்ளி மாணவ- மாணவிகளுக்கு செஸ் போட்டி

இடிகரை, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு செஸ் போட்டி
இடிகரை
சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறு கிறது. இதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய வட்டார பள்ளிகளுக்கு இடையே செஸ் போட்டி இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதை இடிகரை பேரூராட்சி தலைவர் ஜெனார்த்தனன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் 30-க்கும் மேற் பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வட்டார கல்வி அலுவலர்கள் ரமேஷ்பாபு, தன்னாசி உள்பட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல, பெரியநாயக்கன்பாளையம் வட்டார அளவிலான செஸ் போட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கவுன்சிலரும் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான கார்த்திக் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்ரன், செயல் அலுவலர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராமசந்திரன் வரவேற்றார். இதில், 40-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






