செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம்


செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம்
x

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஓட்டத்தை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து கலெக்டர் கவிதாராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஓட்டமானது, கலெக்டர் அலுவலக ரவுண்டானா, நகராட்சி அலுவலகம், அண்ணா சிலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் வழியாக விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு ஓடினர்.

இந்த விழிப்புணர்வு ஓட்டத்தின் போது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி பஸ்களில் ஒட்டப்பட்டுள்ள ஒட்டு வில்லைகளை கலெக்டர் பார்வையிட்டார். மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடிய செஸ் போட்டிகளையும் அவர் பார்வையிட்டார். மேலும் செல்பி எடுப்பதற்கான அமைப்பில் கலெக்டர் செல்பி எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story