செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் பி அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் ஆனது. வெள்ளிப்பதக்கத்தை ஜார்ஜியாவும், வெண்கலப்பதக்கத்தை இந்தியாவின் ஏ அணியும் பெற்றது.

இதனையடுத்து, செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கங்கள் வென்ற இரண்டு இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாடில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஓபன் பி அணி, மகளிர் ஏ அணிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.1 கோடி பரிசு தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


Next Story