செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பாதுகாப்பு அளித்த போலீசாரை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய ரஜினி...!


செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பாதுகாப்பு அளித்த போலீசாரை வீட்டுக்கு அழைத்து  பாராட்டிய ரஜினி...!
x

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின் போது பாதுகாப்பு அளித்த போலீசாரை நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரம், பூந்தேரி கிராமத்தில் உள்ள நட்சத்திர அரங்கில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

துவக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை துவக்கி வைத்தனர்.

கோலாகலமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா உடன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் மாமல்லபுரம் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட போலீசாரை நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.


Next Story