செஸ் ஒலிம்பியாட் போட்டி: வாணியம்பாடியில் கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு


செஸ் ஒலிம்பியாட் போட்டி: வாணியம்பாடியில் கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு
x

வாணியம்பாடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருப்பத்தூர்,

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டி குறித்து மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், நடனப்போட்டி, பேச்சுப்போடி, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டியும் நடைபெற்றது.


Next Story